Iraiyanbu Illam

Iraiyanbu Illam IRAIYANBU ILLAM is one of the graceful homes for elders.

Elderly parents of loving children, who work elsewhere and ever loving parents of NRIs live in peace that surpasses all our understanding. Parents of NRIs who find it difficult to live alone in India are given preference by the founders who themselves were once NRIs. With a dedicated team of service minded men and women, the Chelliahs of the Secretariat Colony personally take care of the inmates as their own parents and serve them as they serve God Almighty.

வன்முறை!வன்முறை என்றும் நன்முறை  அல்ல. வாள், தடி, குண்டுகள் கொன்று விடும்.தன் முறை வரும்வரை பொறுப்பது நல்லதன்மையேயென்று ...
07/12/2022

வன்முறை!

வன்முறை என்றும் நன்முறை அல்ல.
வாள், தடி, குண்டுகள் கொன்று விடும்.
தன் முறை வரும்வரை பொறுப்பது நல்ல
தன்மையேயென்று சென்று விடும்.
என்முறை தவறிய பேச்சிலும் கூட
இருக்கிற தீமையை அழித்து விடும்.
பன்முறை கேட்கும் அன்பையே நாட,
பாவி நெஞ்சைக் கிழித்து விடும்!

-கெர்சோம் செல்லையா.

என் மனைவி லிடியாவிற்கு,பிறந்தநாள் வாழ்த்து!தன்னினம்,  வீடு, யாவையும் விட்டு,தலைவனை* நம்பிய  ஒருத்தி,என்னிடம் வந்து, உள்ள...
15/11/2022

என் மனைவி லிடியாவிற்கு,
பிறந்தநாள் வாழ்த்து!

தன்னினம், வீடு, யாவையும் விட்டு,
தலைவனை* நம்பிய ஒருத்தி,
என்னிடம் வந்து, உள்ளமும் தொட்டு,
இல்லறம் கட்டினாள் திருத்தி.
பன்மொழி பேசி, பரிவுடன் நோக்கி,
பணியால் பிணியைத் துரத்தி,
நன்னறம் செய்த என் மனையாளும்,
நன்றாய் வாழ்க, விருத்தி!

-கெர்சோம் செல்லையா.

*தலைவன் = இயேசு

HAPPY DEEPAVALI!'Let there light' in our soul and spirit so that we can live as 'Children of Light'.May the God of Light...
24/10/2022

HAPPY DEEPAVALI!
'Let there light' in our soul and spirit so that we can live as 'Children of Light'.
May the God of Light bless you this day!
-Gershom Chelliah.

QUEEN ELIZABETH III had the privilege of gazing at this Queen, when she visited the Kingdom of Bahrain in the year 1979....
09/09/2022

QUEEN ELIZABETH II
I had the privilege of gazing at this Queen, when she visited the Kingdom of Bahrain in the year 1979. Bahrain Holiday Inn, where I served for more than12 years was taking care of her food and beverages. Our Chef, Monsieur Bernard Cuq was one among the top ten Chefs of the world of those days. His cuisine became so popular, that the visiting royal family asked for the details of the menu later, through a royal correspondence. Chef Cuq, a French national flatly refused, citing the reason: FAMILY SECRET.
The photo below is the rarest of rare, taken during her earlier visit to Chennai, when Thiru. Kamaraj was the Chief Minister.
A pious lady, who wished to live in Christ and serve in Christ, has gone to be with her Master for ever. May her soul rest in His peace.
-GERSHOM CHELLIAH.

05/09/2022

நாலடி நற்செய்தி!

என் ஆசிரியர்!

என்னிலை உயர்வில், இறையருளோடு,

பன்னிலை இருப்போர் தூண்டலுண்டு.

முன்னிலை நிற்கும் என்னாசிரியர்,

நன்றாய் வாழ்வர், வேண்டலுண்டு!

-கெர்சோம் செல்லையா.

சாதிகள் நன்றோ?முதலில் வந்த மனிதன் யாரோ?முன்னோர் கூறும் ஆதம் பேரோ?அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?அப்படியாயின், சாதிகள் நன்றோ...
01/09/2022

சாதிகள் நன்றோ?

முதலில் வந்த மனிதன் யாரோ?
முன்னோர் கூறும் ஆதம் பேரோ?
அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?
அப்படியாயின், சாதிகள் நன்றோ?
எதனை வாங்கக் கோவில் சென்றாய்?
ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?
கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.
காணும் சாதிகள், சொறி, சிரங்கு!

-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com

நாலடி நற்செய்தி!ஒரு முறை கூட!ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.தெரு இடம் இருக்க, போனது வலமே.மறுமுறை நோக்கித் திருந்தும் ...
01/09/2022

நாலடி நற்செய்தி!
ஒரு முறை கூட!

ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.
தெரு இடம் இருக்க, போனது வலமே.
மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,
இருமுறை பிறந்த இறையின் இனமே!

-செல்லையா.

பொய்யா? மெய்யா?உள்ளே இருப்பது துரும்பு. ஊரில்  உரைப்பது இரும்பு.வெள்ளி, பொன்னாய் நினைத்து,விழாதீர், அலகை அணைத்து. எள்ளில...
31/08/2022

பொய்யா? மெய்யா?

உள்ளே இருப்பது துரும்பு.
ஊரில் உரைப்பது இரும்பு.
வெள்ளி, பொன்னாய் நினைத்து,
விழாதீர், அலகை அணைத்து.

எள்ளிலிருப்பது எண்ணெய்;
எடுக்கும் உழைபே உண்மை.
கொள்ளி வைக்கும் பொய்மை.
கொள்வீர் இறையின் மெய்மை!

-கெர்சோம் செல்லையா.

சொல்லும் செயலும்!நற்செய்தி: யோவான் 8:41-42.41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்...
29/08/2022

சொல்லும் செயலும்!

நற்செய்தி: யோவான் 8:41-42.

41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு. அவர் தேவன் என்றார்கள்.

42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

நல்வழி:

அன்பே இறைவன் என்று மொழிவார்;
ஆயினும் அன்பை அவர் பொழியார்.
தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;
தமது செயலால் மகன் பழிப்பார்.
இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,
இயேசுவோடு பிணைந்திடுவார்.
நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,
நலமிலா தீதும் களைந்திடுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இயேசு போன்று நடப்போம்!நற்செய்தி: யோவான் 8:39-40.39. அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்க...
26/08/2022

இயேசு போன்று நடப்போம்!

நற்செய்தி: யோவான் 8:39-40.39.

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.

40. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

நல்வழி:

தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,
தவறு என்று சொல்லேன் நான்.
முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,
முழுவதும் இன்று அறுப்பவன் யான்.
மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,
மனிதருக்கென்ன செய்தேன் நான்?
எந்தையிறையே, என்னைத் தந்தேன்;
இயேசு போன்று நடக்கத்தான்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?நற்செய்தி: யோவான்: 8:37-38.37. நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்...
24/08/2022

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?

நற்செய்தி: யோவான்: 8:37-38.

37. நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.

38. நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

நல்வழி:

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
பெரியோர் என்பின் சிந்திப்பீர்.
கற்றோர் என்றால் கொலை செய்வாரா?
கயமை வெறியினை நிந்திப்பீர்.
தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன?
தூயோன் இயேசுவைச் சந்திப்பீர்.
உற்றார் உறவாய் யாவரும் வருவார்;
ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அடிமையா?  பிள்ளையா?நற்செய்தி: யோவான் 8: 35-36.   35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் ...
22/08/2022

அடிமையா? பிள்ளையா?

நற்செய்தி: யோவான் 8: 35-36.

35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.

36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

நல்வழி:

திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன்.
தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.
பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன்.
பழியில் விழவே கெட்டிருந்தார்.
பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன்.
பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.
விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன்.
விண் மகவாகத் தொட்டிருந்தார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Address

No. 24, Secretariat Colony, Main Road, Retteri, Kolathur
Chennai
600099.

Alerts

Be the first to know and let us send you an email when Iraiyanbu Illam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iraiyanbu Illam:

Share

Category