17/12/2021
Madurai Balloon Bun Parotta
மதுரை பரோட்டா என்றால் அதற்கு என தனி சுவை, தனி ரசிகர்கள் ஏராளம். பரோட்டாவில் பல வகையான ரகங்கள் உள்ளது. அதில் பன் பரோட்டா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை சுவைப்பதற்கு தனி கூட்டமே உள்ளது. இப்பொழுது அதையும் தாண்டி பலூன் போல் பெரிதாக ஊதி நிற்கும் பலூன் பன் பரோட்டாவை அறிமுகம் செய்துள்ளது ஆச்சி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்.
பார்த்தவுடனே நாவை தூண்டி சாப்படி அழைக்கும் இந்த புதிய பலூன் பன் புரோட்டா கிடைக்கும் இடம் மதுரை ரயில்வே சந்திப்பு நிலையத்தின் அருகில் உள்ள தங்கரீகல் தியேட்டருக்கு எதிர்புறம் உள்ள டவுன்ஹால் ரோட்டில் பிரமவிலாஸ் அல்வா கடையை தாண்டியதும் அமைந்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக இயங்கி வரும் ஆச்சி செட்டிநாடு ரெஸ்டாரன்ட் அசைவ உணவிற்கு பெயர்போனது என்றபோதும் சைவ உணவும் இங்குள்ளது. மாலை 5 மணிக்கு மேல் சவர்மா, இட்லி, தோசை ஆகியவை அசைவம் மற்றும் சைவத்தில் கிடைக்கும்.
நட்சத்திர விடுதியில் கிடைக்கும் அனைத்து அசைவ உணவுகளும் அதே தரத்தில், சுவையில் இங்கு கிடைக்கும். முக்கியமாக அனைத்து வகையான பிரியாணி மற்றும் சைனீஸ் ஃபுட், பலூன் பன் புரோட்டா, 007 சிக்கன், மீல்ஸ் மற்றும் மகாராஜா சிக்கன் பொறியல் ஆகியவை இங்கு சிறப்பு.
வெளியூர் பயணிகள் மதுரைக்கு ரயில்வே நிலையம் அல்லது பெரியார் நிலையத்திற்கு வந்தால், குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற உணவகம் இது. ஏசி அறை உள்ளது. விலைக்கு ஏற்ற அளவு கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு அசைவ உணவும் வெவ்வேறு சுவையை கொடுக்கும்.
இந்த ஆச்சி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்டில் உள்ள பல்வேறு வகையான உணவுகள் குறித்து நாம் தொடர்ச்சியாக பார்க்க போகின்றோம். அந்த வகையில் முதல் வீடியோவாக புதிதாக அறிமுகம் செய்துள்ள பலூன் பன் பரோட்டா குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளோம்.
ரூ.15க்கு இந்த பலூன் பன் பரோட்டாவுடன் செம ருசியான மட்டன் மற்றும் சிக்கன் கிரேவி கொடுக்கப்படுகிறது. கூடுதலாக செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கிக் கொண்டால் அதன் சுவையே தனி. பரோட்டாவிற்கு செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கிக் கொண்டால் அதை தாராளமாக மூன்றுபேர் பகிர்ந்து கொள்ளலாம். அவ்வளவு அளவு கொடுக்கப்படுகிறது.
இதுவரை நீங்கள் பலூன் பன் பரோட்டாவை சாப்பிடவில்லை என்றால், ஒரு முறை இங்கு வந்து சாப்பிட்டுப் பாருங்கள் அடிக்கடி வருவீர்கள். ருசி அந்த அளவில் உள்ளது. ஆன்லைனிலும் நீங்கள் ஆர்டர் செய்து ருசித்து பார்க்கலாம். அதேபோல் ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் இல்ல விழாக்களுக்கு வாங்கிக் கொள்ளலாம்.
முகவரி
ஆச்சி செட்டிநாடு ரெஸ்டாரன்ட் ஏசி
எண் 82, டவுன்ஹால்ரோடு. மதுரை 01.
தொலைபேசி எண்
0452 4294455 ☎️ 95662 63330
Madurai Balloon Bun Parotta