Dharma Food Corner - DFC

Dharma Food Corner - DFC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharma Food Corner - DFC, Hotel, Sangeeth Nagar, opp to EB office, Madurai.

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாத...
19/10/2017

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!

உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம்.

இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.

ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இன்னும் பல கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது.

சரி, இப்போது கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

புற்றுநோய்

கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும்.

இதய நோய்

கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.

உடல் உஷ்ணம்

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வந்தால், உடல் உஷ்ணமானது குறையும்.

வெள்ளை முடி

கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தவி வந்தால், பரம்பரை நரை முடி வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைக்கலாம்.

எடை குறைவு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்

இனிமையான குரல்

கறிவேப்பிலை இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், குரலானது இனிமையாகும்.

சளி

சளியால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், சளி குறையும்.

கண் பார்வை

பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்

19/10/2017

DFC's health tip:

கடுக்காய் - மருத்துவ பயன்கள்! பல நாட்களாய் ஆறாத புண்.ரணம் இவற்றினை 4 வேளை கடுக்காய் பற்று ஆற்றிவிடும்.தோல் வியாதி எதுவாயினும் கடுக்...

Today our special...
12/10/2017

Today our special...

02/10/2017
சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?‘உ ணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் ...
10/09/2017

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?
‘உ ணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.
சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள் அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.
சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
அதாவது, ''சிக்கன் மட்டுமல்ல... இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.
ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்!
Hotel Dharma - DFC

Address

Sangeeth Nagar, Opp To EB Office
Madurai
625018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharma Food Corner - DFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category