Jagavan Estate for Pilgrims Stay at Srivanjiam,

Jagavan Estate for Pilgrims Stay at Srivanjiam, A Place for your Convenient stay at Srivanjiam Village with all facilities..AC Rooms,Heater,Closed P

அன்பார்ந்த நண்பர்களே.. பக்த கோடிகளே.. சேவார்த்திகளே.. 💐நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஶ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் ஸ்ரீமங்...
28/12/2023

அன்பார்ந்த நண்பர்களே..
பக்த கோடிகளே..
சேவார்த்திகளே..

💐நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஶ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில்
ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை
ஸ்ரீவாஞ்சிநாத பெருமானுக்கு
08 /02/ 2023 வியாழக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது..

💐2009க்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் மிக விமரிசையாக பல்வேறு சிறப்புகளுடன் நடைபெறுகிறது.. பக்தர்கள்/சேவார்த்திகள் அனைவரும் முன்னதாகவே திட்டமிடுங்கள்..
ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீவாஞ்சிநாத பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதற்கு.. உங்களால் இயன்ற அளவு திருக்கோயிலுக்கு நன்கொடை அளித்து (சிறிதளவே ஆனாலும்) மகிழுங்கள்..

💐என்ன பக்தகோடிகளே.. இந்த தகவலை நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி மகிழுங்கள் உங்களையெல்லாம் மானசீககமாக வரவேற்று மகிழும்🙏🙏 திருவாஞ்சியநாதரின் தொண்டன் ஶ்ரீவாஞ்சியம் சுந்தரமூர்த்தி வாஞ்சிலிங்கம்

இறைவனின் திருவடி தரிசனம்..
பாப விமோசனம்..
தயாராகுங்கள் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு.. ஹர ஹர சிவ சிவ..🕉️🕉️🔱🔱🦚🦚

💐யதார்த்தம்💐*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத...
15/07/2023

💐யதார்த்தம்💐
*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*
*வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*
*நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*
*மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*
*பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவர் நடித்தால் நீங்கள் நல்லவன். உண்மை பேசினால் பைத்தியக்காரன். அன்பு காட்டினால் ஏமாளி. எடுத்துச் சொன்னால் கோமாளி.*
*இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து. அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.*
*நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில வலிகள் இல்லாமல் இருக்கும்.*
*தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.*
*அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும்.*
*நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*
*யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை. ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*
*மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள். தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*

💐முக்தி தரும் தலங்களை அறிவோம்..*தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர் காஞ்சி கழுக்...
07/07/2023

💐முக்தி தரும் தலங்களை அறிவோம்..

*தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர் காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி வாஞ்சியம் என முக்தி வரும்*

ஶ்ரீவாஞ்சியம் ஷேத்திரம்-காசியை விட வீசம் அதிகம் என தலவரலாறு குறிப்பிடுகிறது.. காசியில் இறப்பவர்களுக்கு முக்தி நிச்சயம். ...
07/07/2023

ஶ்ரீவாஞ்சியம் ஷேத்திரம்-காசியை விட வீசம் அதிகம் என தலவரலாறு குறிப்பிடுகிறது.. காசியில் இறப்பவர்களுக்கு முக்தி நிச்சயம். ஆனால் காசியில் இறந்தால் எமவாதனை கிடையாது என்பர்..ஆனால் ஒரு ஷணநேரம் பைரவ வாதனை உண்டு என்பர்.. ஆனால் ஶ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் இறப்பவர்களுக்கு எமவாதனை பைரவ வாதனை இரண்டும் இல்லை என்பது தலபுராணம் கூறும் தகவல்..
ஶ்ரீவாஞ்சியம் ஶ்ரீமங்களாம்பிகை உடனுறை ஶ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து வாழ்வாங்கு வாழ்வோம்..

20/11/2021

ஆன்மீக அன்பர்களே..
கார்த்திகை மாதத்தை கொண்டாடுவோம்...
💐ஶ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தீர்த்தவாரி வருடா வருடம் எப்போதும் நடைபெறும்..

💐 புனித தீர்த்தமான "குப்த கங்கை" நீர்நிறைந்து நிரம்பி வழிகிறது.. தொடர்ந்து குப்தகங்கையில் நீர் குறைவரநிறைய பிராத்திப்போம்..💐

💐தீர்த்தவாரியில் இறைவனின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்...

இந்த வருட கார்த்திகை மாதத்தில்..21.11.2021முதல் ஞாயிறு
28.11.2021இரண்டாம் ஞாயிறு
05-12.2021மூன்றாவது ஞாயிறு
12-12-2021கடைஞாயிறு...

💐பிரார்த்தனை செய்வோம்.. 💐இறைவனின் நல்லாசியால் அனைவரும் தீர்த்தவாரியில் கலந்து கொள்ள பிராத்திப்போம்..

💐*அவன் செயலாலே அவன் தாள் வணங்கி*
அழைத்து மகிழும் அன்பன் *சைவசித்தாந்த ரத்னம்* பிர்ம்மஶ்ரீ ஶ்ரீவாஞ்சியம் சுந்தரமூர்த்தி வாஞ்சிலிங்கம்..

Address

Nannilam
610107

Telephone

+919500261822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagavan Estate for Pilgrims Stay at Srivanjiam, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagavan Estate for Pilgrims Stay at Srivanjiam,:

Share

Category