24/03/2015
மும்பை,
உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்துமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தி பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ஆ.ப.ஜே. அப்துல்கலாம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மும்பையில் 'எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்குபெற்ற அப்துல்கலாம் பேசியவை பின்வருமாறு:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் தொழில் உற்பத்தி துறைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பயோமெடிக்கல் இன்ஜினியரிங், ஆயில் மற்றும் கேஸ், ராணுவம், போக்குவரத்து, விமானத்துறை, ஹார்டுவேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலக அளவில் உற்பத்தி துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. வரும் 2025-க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் அளவுக்கு உற்பத்தி துறையின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. குறைந்த செலவில் தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் 1 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு இப்போது இரு்ப்பதை விட 6 மடங்கு அதிக வளர்ச்சியில் உற்பத்தி துறையை எடுத்து செல்ல முடியும். இவை 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 9 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். உற்பத்தி துறையை ஊக்குவிக்க ஆராய்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கலாம் பேசினார்.