25/01/2024
🚩 #திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா2024 🔥
💥திருச்செந்தூர் மாசி திருவிழா பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 25, 2024 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி - திருச்செந்தூர் #மாசிமகம் தேரோட்டம்💥
தேதிகள் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13 , 2024 - செவ்வாய்
மாலை: 4.30 மணி - கோயில் யானை மேல் #கொடிபட்டம் வீதி உலா
14 பிப்ரவரி 2024 - புதன் - நாள் 1 - மாசி உற்சவரம்பம்
காலை: 4.30 மணி முதல் 5 மணி வரை - மகர லக்னம் - 🚩 #கொடியேற்றம்
மாலை: 4.30 மணி - ஸ்ரீ #அப்பர் சுவாமிகள் தங்க சப்பரம் - திருவீதி உழவர் பணி.
இரவு: 7 மணி - ஸ்ரீ #பெலிநாயகர் தந்த பல்லக்கில் #அஸ்திரதேவர் உடன் உலா
15 பிப்ரவரி , 2024 - வியாழன் - நாள் 2
காலை: 10.30 மணி - சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் சிறிய பல்லக்கு
இரவு: 7 மணி - #சிங்ககேடய சப்ரம் ; அம்பாள் #பெரியகேடய சப்பரம்
16 பிப்ரவரி , 2024 - வெள்ளி - நாள் 3
காலை: 7 மணி - பூங்கோயில் சப்பரம் -கேடயம் சப்பரத்தில் அம்பாள் ;
மாலை / இரவு: 6.30 மணி - #தங்கமுத்துகிடா வாகனம் - அம்பாள் வெள்ளி #அன்னவாகனம்
17 பிப்ரவரி 2024 - சனி - நாள் 4
காலை: 7 மணி - தங்க முத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்
மாலை / இரவு: 6.30 pm - #வெள்ளியானை , அம்பாள் #வெள்ளிசரபவாகனம்
பிப்ரவரி 18 , 2024 - ஞாயிறு - நாள் 5
காலை: 7 மணி - வெள்ளியானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம்
இரவு: 7.30 மணி - மேலக்கோவில் #குடவருவாயில்தீபாராதனை - தங்க மயில் வாகனம்.
19 பிப்ரவரி 2024 - திங்கள் - நாள் 6
காலை: 7 மணி - கோ ரதம் ;
இரவு: 8 மணி - வெள்ளி தேர் , அம்பாள் இந்திர விமானம்
பிப்ரவரி 20 , 2024 - செவ்வாய் - நாள் 7
அதிகாலை: 4.30 மணி முதல் 5 மணி வரை - மகர லக்னம் - ஸ்ரீ சண்முகர் #உருகுசட்டசேவை
காலை: 5.30 மணிக்கு மேல் - ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான் பல்லக்கு
காலை: 8.30 மணி - #வெட்டிவேர் சப்பரத்தில் ஆறுமுக நயினார்
மாலை: 4.30 மணிக்கு பிறகு - தங்க சப்பரத்தில் #சிவப்புசாத்தி❤️
பிப்ரவரி 21 , 2024 - புதன் - நாள் 8
காலை: 5 மணி - பெரிய வெள்ளி சப்பரத்தில் #வெள்ளைசாத்தி 🤍;
மதியம்: காலை 10.30 மணிக்குப் பிறகு - #பச்சைசாத்தி 💚சப்பரம்
- ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான், ஸ்ரீ #அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளி குதிரை வாகனம்
22 பிப்ரவரி , 2024 - வியாழன் - நாள் 9
காலை: 7 மணி - பல்லக்கு
இரவு: 8 மணி - #தங்ககைலாயபர்வதம் , வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள்
இரவு: 10 மணி - தேர் கடாக்ஷம்
23 பிப்ரவரி , 2024 - வெள்ளி - நாள் 10
காலை: 6.30 முதல் 7.00 வரை - கும்ப லக்னம் - ரதம் #தேரோட்டம்
இரவு: 7.30 மணி - பெரிய திருப்பல்லக்கு
24 பிப் , 2024 - சனி - நாள் 11
இரவு: 7 மணி - புஷ்ப சப்பரம் - தெப்பக்குளம் மண்டகபாடி சேர்தல்
இரவு: 10.30 மணிக்கு பிறகு -அபிசேகம், அலங்காரம் - #தெப்பஉற்சவம்.
(11 சுற்று வருதல் அதாவது தெப்பத்தில் 11 சுற்று) - மேலக்கோவில் சேர்தல்
பிப்ரவரி 25 , 2024 - ஞாயிறு - நாள் 12
மாலை: 4.30 மணி - மஞ்சள் நீராடல்
இரவு: 9 மணி - மலர்கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் - திருக்கோவில் சேர்தல்
🦚 குறிப்பு:
- ஸ்ரீ #குமரவிடங்கப்பெருமான் ஸ்ரீ #தெய்வானை அம்மனுடன் 2ம் நாள் முதல் 12ம் தேதி வரை ஸ்ரீ #விநாயகர், #திருஞானசம்பந்தர், #திருநாவுக்கரசர், #சுந்தரர், #மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- 12 நாள் திருவிழாவின் போது பல்வேறு மண்டபம், மண்டகபாடியில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
- ஸ்ரீ #ஜெயந்திநாதர் 2-ஆம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை பகலில் தங்கச் சப்பரத்திலும் , இரவில் வெள்ளிச் சப்பரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
#திருச்செந்தூர்மாசித்திருவிழா2024
திருச்செந்தூர் முருகன் கோவில்