SIO Tiruppur

SIO Tiruppur மாணவ மற்றும் இளைஞர்களை இறை வழிக்காட்டுதல் அடிப்படையில் கட்டமைத்தல்..

*இந்த பேரழிவு இறைவனுடைய தண்டனை *என்று சில மக்கள் கூறிக்* *கொண்டிருக்கிறார்கள்* அப்படி கூறத்* *தேவையில்லை**நஹஸ் மாலா**அகி...
04/08/2024

*இந்த பேரழிவு இறைவனுடைய தண்டனை *என்று சில மக்கள் கூறிக்* *கொண்டிருக்கிறார்கள்* அப்படி கூறத்* *தேவையில்லை*

*நஹஸ் மாலா*
*அகில இந்திய முன்னாள் தலைவர்*
*Sio*

ஒவ்வொரு நபிமார்களின் காலகட்டத்தில் ஒவ்வொரு விதமான பேரழிவு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த சமூகங்களின் அழிவு அந்தந்த நபிமார்களின் முன்னிலையில் இறைவன் ஏற்படுத்தினான். அதை வைத்து, இந்த பேரழிவை அல்லாஹ்வின் தண்டனை என்று நாம் முடிவு செய்வது தவறு.

இந்த பேரழிவு வயநாடு மக்களுக்கான சோதனையாக இருக்கலாம் அல்லது அதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கான சோதனையா? என்று சொல்ல‌ முடிய வில்லை.

திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களை திடீரென தாக்காது என்று இவ்வுலகில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களை தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா? என்ன, இம் மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றி ருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி" குறித்து அச்சமற்றிருப்பார்கள்.(அல்அஃராஃப் 97,98,99)

நாமெல்லாம் *நான் சாகிப்கள்*
நான் நான் என்ற கர்வத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நான் பெரியவன், நான் பெரிய உத்யோகத்தில் இருக்கிறேன், பெரிய பதவியில் இருக்கிறேன்.
நான் ஒரு பெரிய வியாபாரி. நீங்கள் எதுவானாலும் இருக்கலாம், இறைவனுடைய அருளால் என்று மறவாதீர்கள்.

நான் நான் என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவன் என்ன கூறுகிறான்? மனிதன் பலவீனமானவன் என்று.

நம்மை பொருத்தளவு வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது அவ்வுளவு தான்.
எதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு கிராமத்தில் நடந்திருக்கிறது என்று நினைக்கலாம். இது போல எங்கும் நடக்கலாம்‌ என்று நாம் கடந்து செல்லுகிறோம்.
நமக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

ஜாமியாவில் படித்த ஒரு மாணவர் ஷியாப் ஃபைசி. அவர் வையநாடில் ஒரு பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றினார். சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அவர்தான் ஜும்மா குத்பா நடத்தினார். அவர் இரவில் எப்போதும் பள்ளிவாசலிலேயே தங்கிவிடுவார்.
இந்த பேரழிவில்
அவருடைய உடல் வையநாட்டிலிருந்து 80km தொலைவில் கண்டறியப்பட்டது. பிறகு வயநாட்டிலிருந்து அவருடைய உறவுகள் நண்பர்கள் ஒரு சிலர் வந்து இங்கிருந்து உடலை வயநாட்டிற்கு எடுத்து சென்றார்கள்.

திருக்குர்ஆனில் லுக்மான் அத்தியாயத்தில் இறைவன் கூறுகிறான்."நீங்கள் எங்கு மரணிப்பீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது" என்று.

இங்கு நிலம்பூரில் பல நண்பர்கள் மற்றும் இங்கு வசிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு Volunteers Group அமைத்து 21 Batch ஆக பிரித்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
அப்போது Volunteers மனித உடல்களின் பாகங்களை எடுத்துக் கொண்டு வருவது பார்க்கும் போது இது இறைவனின் மாபெரும் சோதனையாக உணர்கிறேன்.

தலை இல்லாத உடல், உடல் இல்லாத தலை, கை கால், பாதம் இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் எத்தனை உடல்களின் பாகங்களை எடுக்க காத்திருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை மனித உடல்களின் பாகங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளது என்று தெரியவில்லை.
இன்னும் மீட்பு பணிகள் ஓய்வின்றி நடந்துக் கொண்டிருக்கிறது.

NGO உடன் சேர்ந்து புணர் நிர்மாணம் செய்ய தயாராக இருக்கின்றோம்.

நாம் எதை செய்தாலும் மரணித்தவர்களுக்கு ஈடுசெய்ய நம்மால் சாத்தியம் இல்லை.

தமிழில்
ஜொஹரா சுல்தான்

25/01/2024

20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்
Islamic Foundation TRUST அரங்கு

இஸ்லாமிய நூல்கள் அனைத்தும்
இப்போது ஒரே இடத்தில்...

Stall No.: #131
-----------------------------------
நாள்: 25.01.2024 - 04.02.2024

நேரம்: 11 AM - 9.30 PM

இடம்: Velan Hotel,Tiruppur
காங்கேயம் ரோடு, #திருப்பூர்

அனைவரும் வருக
அறிவமுதம் பெறுக...

www.iftchennai.in
8668057596

Tirupur Welfareparty Tirupur திருப்பூர் செய்திகள் திருப்பூர் நண்பர்கள் திருப்பூர் வியாபாரிகள் திருப்பூர் விவசாயிகள் Jih Tiruppur SIO Tiruppur Sahul Hameed Anwar Deen

25/01/2024

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாணவர் அணிச் செயலாளர் திரு.எழிலரசன் MLA தலைமையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். SIO சார்பாக மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான், மாநில இணைச் செயலாளர் முஹம்மது ஜாஃபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

30/12/2023
01/10/2023
அல்ஹம்துலில்லாஹ் 💐💐💐இன்று 01/10/2023 ஞாற்றுக்கிழமை, தேசிய அளவில் நடைபெற்று வருகின்ற SIO வின் *CAMPUS CAMPAIGN* நிகழ்ச்சி...
01/10/2023

அல்ஹம்துலில்லாஹ் 💐💐💐

இன்று 01/10/2023 ஞாற்றுக்கிழமை, தேசிய அளவில் நடைபெற்று வருகின்ற SIO வின் *CAMPUS CAMPAIGN* நிகழ்ச்சி தொடர்பாக *திருப்பூர் SIO* சார்பாக "கல்வி வளாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி" மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றன.இதில் 70 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

1.இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கிராத் : Aadhil Khan, SIO ஊழியர்

2. தலைமை உரையாக மாவட்ட தலைவர் : *A. S. இப்ராஹிம்* அவர்களும்

3.சிறப்புரையாக: *Abdul Ahad, முன்னால் SIO உறுப்பினர்* அவர்களும்

அடுத்த சிறப்புரையாக *மாநில தலைவர் சகோ : அஹமது ரிஸ்வான்* அவர்களும் நிகழ்த்தினார் ,

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் *சகோ அபு அமீன் SIO உறுப்பினர்* அவர்கள் தொகுத்து வழங்கினார்

இறுதி நன்றியுரையாக *SIO உறுப்பினர் சகோ. முஹம்மது அனஸ்* வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அணைத்து மாணவர்களுக்காகவும் துஆ செய்யுங்கள்🤲🏻

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ் ...    திருப்பூர் மாவட்டம் ஆசியாவின் அதிக மாணவிகளின் எண்ணிக்கை கொண்ட *ஜெய்வாபாய் அரசு* பெண்கள் மேல்நிலை...
08/09/2023

அல்ஹம்துலில்லாஹ் ...
திருப்பூர் மாவட்டம் ஆசியாவின் அதிக மாணவிகளின் எண்ணிக்கை கொண்ட *ஜெய்வாபாய் அரசு* பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை *ஸ்டெல்லா அமலோற்பவ மேரி* அவர்களுக்கு
தேசிய அளவில் *நல்லாசிரியர் விருது* வழங்கப்பட்டத்தையொட்டி *SIO திருப்பூர் சார்பாக இனிப்பு வழங்கி வாழ்த்து* தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு *நபிகள் நாயகம் வரலாறு இளம்பிறை மற்றும் அதிர்வுகள்-2023* அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

SIO
Tirupur

02/09/2023

Go forth, whether light or heavy, and strive with your wealth and your lives in the cause of Allah. (Quran 9:41)

Campus Leaders Meet

🗓️ 10/09/2023
📍 Chennai

*****
Soul Spark:
Illuminate Ethics
Nation Wide Campus Campaign
5 September - 20 September, 2023

அஸ்ஸலாமு அலைக்கும்77 வது சுதந்திர தின விழாSIO & ஜமாஅத் சேர்ந்து மங்கலம் வேட்டுவபாளையம் மஸ்ஜிதுல் இஃக்லாஸ் பள்ளிவாசல் சுத...
15/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

77 வது சுதந்திர தின விழா

SIO & ஜமாஅத் சேர்ந்து மங்கலம் வேட்டுவபாளையம் மஸ்ஜிதுல் இஃக்லாஸ் பள்ளிவாசல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில்..

பள்ளியின் தலைவர் *ஜனாப்.அப்துல் வதூத்*
அவர்கள் கொடி ஏற்றினார்

அதைத் தொடர்ந்து..

மங்கலம் SIO பொறுப்பாளர்
*முஹம்மது அனஸ்* வாழ்த்துரை நிகழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து
பள்ளியின் இமாம்.ஹாஃபிழ் *நிஸாருதீன்* அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்

நன்றியுரை :
மங்கலம் JIH உறுப்பினர் அப்துல் ரஷீத்

அல்ஹம்துலில்லாஹ்...💐

MANGALAM
TIRUPPUR

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when SIO Tiruppur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share