20/02/2023
வண்டி சாவியை எடுக்க காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதா?
பவன் பாரிக் (Pawan Parikh) என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த (தகவல் அறியும் உரிமை) ஆர்.டி.ஐ'ன் படி, மதுபோதையில் வண்டி ஓட்டுதல், திருட்டு வண்டி, தேடப்படும் குற்றவாளி மற்றும் சோதனைக்கு உட்படாமல் தப்பிக்க முயலுதல் போன்ற எந்தவொரு காரணமும் இல்லாமல் வாகனத்தின் சாவியை எடுக்க, எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை.
காவலர் வண்டியை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தி அவரின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 179ன் படி 1 மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது 500.ரூ வரையிலான அபராதமோ விதிக்க முடியும்.
சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள காவலர்க்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்கவும் மற்றும் அபராதம் விதிக்கவும் அதிகாரம் இல்லை. இதனை மீறிச் செயல்படும் காவலர்க்கு எதிராக, 100'ஐ தொடர்பு கொண்டு, காவலரின் பெயர் - இடத்தினை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
கிராமப்புறங்களில் சட்ட ஒழுங்கு காவலரே, போக்குவரத்து காவலராகவும் செயல்படுவார்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மத்திய அரசு வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம். 2010/14